பசுமலை


Contributors to Wikimedia projects

Article Images

பசுமலை

மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

பசுமலை என்ற புறநகர்ப் பகுதி, இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] பசுமை மிகுந்த மரங்கள் மற்றும் செடிகள் அதிகம் கொண்ட சிறு குன்று (பசுமலை) சார்ந்த ஊர் இது. 'தேசியம் எனது உடல்; தெய்வீகம் எனது உயிர்'என்று கூறிய இருபதாம் நூற்றாண்டின் அரசியல் தலைவரான 'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்', நூற்பாலை சம்பந்தமாக 'மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பு' என்ற தொழிற்சங்கம் ஏற்படுத்தியது பசுமலையில் தான்.[2] 'The Gateway Hotel Pasumalai, Madurai' என்ற ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று, பசுமலையின் குன்றின் மீது அமைந்துள்ளது.

பசுமலை

பசுமலை

பசுமலை is located in தமிழ் நாடு

பசுமலை

பசுமலை

பசுமலை, தமிழ்நாடு

ஆள்கூறுகள்: 9°53′48.5″N 78°04′36.5″E / 9.896806°N 78.076806°E
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்166 m (545 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்

625004

தொலைபேசி குறியீடு0452
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், பைகாரா, விளாச்சேரி, ஆண்டாள் புரம், வசந்த நகர்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி

கடல் மட்டத்திலிருந்து சுமார் 166 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பசுமலை நகரின் புவியியல் ஆள்கூறுகள்: 9°53'48.5"N, 78°04'36.5"E (அதாவது, 9.896800°N, 78.076800°E) ஆகும்.

மதுரை நகரின் பல பகுதிகளை சாலை மார்க்கமாக பசுமலை இணைக்கிறது. மேலும், தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலை, பசுமலை வழியாகச் செல்கிறது. அரசு மாநகரப் பேருந்து போக்குவரத்து பணிமனை ஒன்று பசுமலையில் உள்ளது.[3] மதுரை - பெரியார் பேருந்து நிலையம் இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

தொடருந்து போக்குவரத்து

தொகு

அருகிலுள்ள திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே இருக்கிறது. மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

வான்வழிப் போக்குவரத்து

தொகு

அவனியாபுரத்தில் உள்ள மதுரை வானூர்தி நிலையம், சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தனது பள்ளிப் பருவத்தில், சில வருடங்கள் கல்வி கற்ற 'பசுமலை மேல்நிலைப் பள்ளி' இங்கு தான் உள்ளது.

மன்னர் திருமலை நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு இசைக் கல்லூரி ஆகியவை பசுமலையில் உள்ளன. சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் தியாகராசர் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. சுமார் 4 கி.மீ. தொலைவில் மதுரை கல்லூரி (கலைக்கல்லூரி)யும், தமிழ்நாடு பல்தொழில் நுட்பக் கல்லூரியும் உள்ளன.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், இங்கிருந்து சுமார் இரண்டே கி.மீ. தூரத்தில் உள்ளது.

தென்னிந்தியத் திருச்சபை தன் கிளை ஒன்றை பசுமலையில் கொண்டுள்ளது. அதில் முதியோர் வாழ்வில்லம் ஒன்றும் உள்ளடங்கியிருக்கிறது. [4]

திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள திருப்பரங்குன்றம் தர்கா இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது.