பாதரச(II) ஆக்சைடு


Contributors to Wikimedia projects

Article Images

பாதரச(II) ஆக்சைடு (Mercury(II) oxide) என்பது HgO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மெர்க்குரிக் ஆக்சைடு அல்லது மெர்க்குரி ஆக்சைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் இது காணப்படுகிறது. அறை வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் பாதரச(II) ஆக்சைடு ஒரு திண்மமாகும். மண்ட்ராய்டைட்டு கனிமமாக இது மிகவும் அரிதாக பூமியில் கிடைக்கும்.

பாதரச(II) ஆக்சைடு
பாதரச(II) ஆக்சைடு
பாதரச(II) ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்

பாதரச(II) ஆக்சைடு

வேறு பெயர்கள்

மெர்க்குரிக் ஆக்சைடு
ம்ண்ட்ரோடைட்டு
சிவப்பு பாதரசம்

இனங்காட்டிகள்
21908-53-2 
ChemSpider 28626 

InChI

  • InChI=1S/Hg.O 
    Key: UKWHYYKOEPRTIC-UHFFFAOYSA-N 

யேமல் -3D படிமங்கள் Image
KEGG C18670 
பப்கெம் 30856
வே.ந.வி.ப எண் OW8750000
  • [Hg]=O

UN number 1641
பண்புகள்
HgO
வாய்ப்பாட்டு எடை 216.59 g·mol−1
தோற்றம் மஞ்சள் அல்லது சிவப்பு திண்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 11.14 கி/செ,மீ3
உருகுநிலை 500 °C (932 °F; 773 K) (சிதைவடையும்)
0.0053 கி/100 மி.லி (25 °செல்சியசில்)
0.0395 கி/100 மி.லி (100 °செல்சியசில்)
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர்,அசிட்டோன், அமோனியா போன்றவற்றில் கரையாது.
Band gap 2.2 எலக்ட்ரான் வோல்ட்டு[1]
−44.0•10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.5 (550 நானோமீட்டர்)[1]
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
செஞ்சாய்சதுரம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−90 கியூ•மோல்−1[2]
நியம மோலார்
எந்திரோப்பி So298
70 யூல்•மோல்−1•கெல்வின்−1[2]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உயர் நச்சு
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0981
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
18 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[3]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பாதரச சல்பைடு
பாதரச செலீனைடு
பாதரச தெலூரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் துத்தநாக ஆக்சைடு
காட்மியம் ஆக்சைடு

மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

| colspan=2 |   verify (இது/?)

1774 ஆம் ஆண்டில் யோசப் பிரீசுட்லி மெர்குரிக் ஆக்சைடை வெப்பப்படுத்துவதன் மூலம் ஆக்சிஜன் வெளியிடப்பட்டதைக் கண்டுபிடித்தார், இருப்பினும் அவர் அந்த வாயுவை ஆக்சினாக அடையாளம் காணவில்லை. மாறாக, பிரீசுட்லி இவ்வாயுவை காற்றேறிய எரிபொருள் என்று அழைத்தார், அதுவே அவர் பணிபுரிந்த அந்த நேரத்தில் கிடைத்த முன்னுதாரணம் ஆகும் [4].

 
மண்டிராய்டைட்டு கட்டமைப்பு (ஆக்சிசன் சிவப்பு அணுக்கள்)
 
சின்னபார் கட்டமைப்பு

பாதரசத்தை தோராயமாக 350 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆக்சிசனுடன் சேர்த்து எரித்து சிவப்பு நிற பாதரச(II) ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. அல்லது பாதரச(II) நைட்ரேட்டை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம் [5]. நீரிய Hg2+ அயனியை காரத்துடன் சேர்த்து வீழ்படிவாக்கினால் மஞ்சள் நிற பாதரச(II) ஆக்சைடு கிடைக்கிறது [5]. துகள்களின் அளவைப் பொறுத்துதான் இந்த நிற வேறுபாடு நிகழ்கிறது. இரு வண்ண பாதரச(II) ஆக்சைடுகளும் நேர்க்கோட்டு O-Hg-O என்ற ஒரே கட்டமைப்பில் கோணல் மாணலான சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ளன. Hg-O-Hg பிணைப்புகளுக்கு இடையேயான கோண அளவு 108°.ஆகும்ref name = "Greenwood"/>.

வளிமண்டல அழுத்தத்தில் பாதரச(II) ஆக்சைடு இரண்டு படிக வடிவங்களில் காணப்படுகிறது, இதில் மண்டிராய்டைட்டு செஞ்சாய்சதுர 2/m 2/m 2/m, Pnma கட்டமைப்பில் காணப்படுகிறது. அறுகோண , hP6, P3221 கட்டமைப்பில் காணப்படும் சல்பைடு கனிமத்தை ஒத்த சின்னபார் இரண்டாவது வகையாகும். இரண்டுமே Hg-O சங்கிலியால் அடையாளப்படுத்தப்படுகின்றன [6] 10 கிகாபைட்டுக்கு மேலான அழுத்தத்தில் இவ்விரண்டு கட்டமைப்புகளும் நாற்கோண வடிவத்திற்கு மாற்றமடைகின்றன[1]..

HgO சில நேரங்களில் பாதரச உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அது மிக எளிதாக சிதைகிறது. அது சிதைவடையும் போது, ஆக்சிஜன் வாயு உருவாகிறது. பாதரச மின்கலன்களுக்காக எதிர்மின் முனையாகவும் பாதரச(II) ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது[7].

 
HgO தூள் புட்டியின் மீதுள்ள விவரத் துணுக்கு

மெர்குரி ஆக்சைடு மிகவும் நச்சுத்தன்மையுள்ள ஒரு பொருளாகும். அதன் தூசுப் படலத்தை உள்ளிழுப்பதன் மூலமும் தோல் வழியாகவும், உட்கொள்வதன் மூலமும் உடலிலும் உறிஞ்சப்படுகிறது. இந்த வேதிப்பொருள் கண்கள், தோல் மற்றும் சுவாசக்குழாய் போன்ற உறுப்புகளை எரிச்சலூட்டுகிறது. இது சிறுநீரகங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தவும் கூடும். இதன் விளைவாக சிறுநீரகக் கோளாறு ஏற்படுகிறது. மனிதர்களுக்கு முக்கியமான உணவுச் சங்கிலியில், குறிப்பாக நீர்வாழ் உயிரினங்களில், உயிரியற் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த வேதிப்பொருளை ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பூச்சிக்கொல்லியாக தடைசெய்துள்ளது [8]. 20 °C வெப்பநிலையில் மெர்க்குரி ஆக்சைடின் ஆவியாதல் மிகக் குறைவு. ஒளியின் வெளிப்பாடு அல்லது 500 செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெப்ப்ப்படுத்தினால் HgO சிதைக்கிறது. இந்த வெப்பத்தால் அதிக நச்சுத்தன்மை கொண்ட பாதரச புகை மற்றும் ஆக்சிசன் வாயுக்கள் உருவாகின்றன. இதனால் தீ பிடிக்கும் ஆபத்தும் அதிகரிக்கிறது. பாதரச(II) ஆக்சைடு ஒடுக்கும் முகவர்களான குளோரின், ஐதரசன் பெராக்சைடு, சுடுபடுத்தும்பொது மக்னீசியம், டைகந்தக டைகுளோரைடு மற்றும் ஐதரசன் டிரைசல்பைடு போன்றவற்ருடன் தீவிரமாக வினைபுரிகிறது. கந்தகம், பாசுபரசு போன்ற தனிமங்களுடன் வினைபுரியும்போது அதிர்ச்சி உணரும் சேர்மங்கள் உருவாகின்றன[9]

.

  1. 1.0 1.1 1.2 "Mercury oxide (HgO) crystal structure, physical properties". Semiconductors • II-VI and I-VII Compounds; Semimagnetic Compounds. Landolt-Börnstein - Group III Condensed Matter. Vol. 41B. Springer-Verlag. 1999. pp. 1–7. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/b71137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-64964-9.
  2. 2.0 2.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-618-94690-7.
  3. Chambers, Michael. "ChemIDplus - 21908-53-2 - UKWHYYKOEPRTIC-UHFFFAOYSA-N - Mercuric oxide [ISO] - Similar structures search, synonyms, formulas, resource links, and other chemical information". chem.sis.nlm.nih.gov.
  4. Almqvist, Ebbe (2003). History of Industrial Gases. Springer. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-306-47277-0.
  5. 5.0 5.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  6. Aurivillius, Karin; Carlsson, Inga-Britt; Pedersen, Christian; Hartiala, K.; Veige, S.; Diczfalusy, E. (1958). "The Structure of Hexagonal Mercury(II)oxide.". Acta Chemica Scandinavica 12: 1297–1304. doi:10.3891/acta.chem.scand.12-1297. http://actachemscand.dk/volume.php?select1=2&vol=12. பார்த்த நாள்: November 17, 2010.
  7. Moore, John W.; Conrad L. Stanitski; Peter C. Jurs (2005). Chemistry: The Molecular Science. Thomson Brooks/Cole. p. 941. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-534-42201-1.
  8. Chemicals Regulation Directorate. "Banned and Non-Authorised Pesticides in the United Kingdom". பார்க்கப்பட்ட நாள் 1 December 2009.
  9. "Mercury (II) oxide". International Occupational Safety and Health Information Centre. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.