பாலியோக்னதாய்


Contributors to Wikimedia projects

Article Images

பாலியோக்னதாய் அல்லது பாலியோக்னத்துகள் என்பவை பறவைகளின் இரு உயிர்வாழும் கிளைகளில் ஒன்றாகும். மற்றொன்று நியோக்னதாய் ஆகும். இந்த இரு கிளைகளும் இணைந்து நியோர்னிதிஸ் என்ற கிளையை உருவாக்குகின்றன. பாலியோக்னதாய் ராட்டைட்கள் எனப்படும் ஐந்து உயிர்வாழும் (மற்றும் இரு அழிந்த கிளைகள்) பறக்கமுடியாத பறவைகளின் கிளைகள், மற்றும் நியோட்ரோபிக் பகுதியில் காணப்படும் ஒரு பறக்கமுடிந்த தினமுவின் கிளை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[1] தினமுவில் 47 வகை இனங்கள் உள்ளன. இதில் 5 கிவி இனங்கள் (Apteryx), 3 கசோவரி இனங்கள் (Casuarius), 1 ஈமியூ இனம் (Dromaius) (மற்றொரு வரலாற்று காலங்களில் அழிந்து போன இனம்), 2 ரியா இனங்கள் மற்றும் 2 தீக்கோழி இனங்கள் உள்ளன.[2] அண்மைக்கால ஆராய்ச்சி பாலியோக்னத்துகள் ஒற்றைத்தொகுதிமரபு உயிரினங்கள் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் பறக்கமுடியாத மற்றும் பறக்கமுடிந்த வடிவங்களுக்கு இடையிலான பாரம்பரிய வகைப்பாட்டியல் பிளவு தவறானது; தினமுக்கள் ராட்டைட்களுடன் தொடர்புள்ளவையாக உள்ளன, அதாவது பறக்கமுடியாத தன்மை இணை பரிணாம வளர்ச்சி மூலம் பல முறை சுதந்திரமாக நடந்துள்ளது.

பாலியோக்னத்துகள்
புதைப்படிவ காலம்:பின் கிரடேசியஸ் – ஹோலோசின், 70–0 Ma
தெற்கு கசோவரி (Casuarius casuarius)
உயிரியல் வகைப்பாடு e
திணை:

விலங்கு

தொகுதி:
Infraclass:

பாலியோக்னதாய்

பைக்ராப்ட், 1900

வரிசைகள்
  • †Aepyornithiformes
  • Apterygiformes
  • Casuariiformes
  • †Dinornithiformes
  • †Lithornithiformes
  • Rheiformes
  • Struthioniformes
  • Tinamiformes

உசாத்துணை

தொகு

  1. *Wetmore, A. (1960)
  2. Clements, J. C. et al. (2010)

வெளி இணைப்புகள்

தொகு

விக்சனரியில் ratite என்னும் சொல்லைப் பார்க்கவும்.

 

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Palaeognathae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.