போ மொழி (இந்தியா)


Contributors to Wikimedia projects

Article Images

அகா-போ (Aka-Bo) அல்லது போ (Bo) எனப்படுவது அந்தமான் தீவுகளில், குறிப்பாக வடக்குப் பகுதியில் பேசப்பட்டு வந்த ஒரு பழமையான மொழி. இம்மொழி பேசுபவர்கள் இப்போது அருகி விட்டார்கள். போ மொழி பேசிய கடைசிப் பெண் பெப்ரவரி 2010 இல் அந்தமான் தீவுகளில் 85 வது அகவையில் மறைந்தார்[1].

அகா-போ
Aka-Bo
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்அந்தமான் தீவுகள்
Extinct2010
மொழிக் குறியீடுகள்
ISO 639-3akm

இம்மொழி இந்தியாவின் நிர்வாகத்தின் கீழுள்ள வடக்கு அந்தமானின் கிழக்கு மத்தியக் கரை, மற்றும் வடக்கு ரீஃப் தீவு ஆகியவற்றில் பேசப்பட்டு வந்திருக்கிறது.