மகளிர் மட்டும்


Contributors to Wikimedia projects

Article Images

மகளிர் மட்டும்

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மகளிர் மட்டும் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி நடித்த இப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கினார், கமல்ஹாசன் தயாரித்துள்ளார்.[1][2][3]

மகளிர் மட்டும்

சுவரிதழ்

இயக்கம்சிங்கீதம் சீனிவாசராவ்
தயாரிப்புகமல்ஹாசன்
கதைகமல்ஹாசன்
திரைக்கதைகிரேசி மோகன்
இசைஇளையராஜா
நடிப்புநாசர்
ரேவதி
ஊர்வசி
ரோகிணி
ஒளிப்பதிவுதிரு
படத்தொகுப்புஎன். பி. சதீஷ்
கலையகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடு25 பிப்ரவரி 1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. தெலுங்கு, மலையாள மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தி மொழியில் லேடீஸ் ஒன்லி எனும் பெயரில் மீண்டும் எடுக்கபட்டது, ஆனால் அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

கமல்ஹாசன் திரு எனும் திருநாவுக்கரசு என்பவரை இந்த திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தி உள்ளார்.[4]

இளையராஜா பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார் மற்றும் கவிஞர் வாலி பாடல்களை எழுதியுள்ளார்.

எண் பாடல் பாடியவர்கள்
1 "மகளிர் மட்டும்" குழுவினர்
2 "கறவை மாடு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
3 "மொத்து மொத்துனு" எஸ். ஜானகி
4 "வீட்டை தாண்டி" எஸ். ஜானகி