ரோண்ட்கன் (அலகு)


Contributors to Wikimedia projects

Article Images

இராண்ஜன் (Roentgen ) எக்சு மற்றும் காமா கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒருசில மாதங்களிலேயே அவை மருத்துவத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.அவைகளை அளவிட சரியான அலகு(Unit) வரையறை செய்யப்பட வில்லை.1927-ல் கூடிய பன்நாட்டு கதிரியல் மாநாடு (International Radiological congres)இராண்ஜன் எனும் அலகை பரிந்துரைத்தது. 1938-ல் கூடிய மாநாடு,அடியில் கண்டவாறு இராண்ஜனுக்கு விளக்கம் அளித்தது.

எந்த அளவு எக்சு அல்லது காமா கதிர்கள் திட்ட அழுத்தத்திலம் வெப்பநிலையிலும் (standard temperature and presure) ஒரு கன சென்றி மீட்டர் வளிமத்தில் ஒரு நிலைமின்அலகு (Electrostatic unit) மின்னூட்ட இணையினைத்(ion pairs) தோற்றுவிக்கிறதோ அந்த அளவு ஒரு இராண்ஜன் எனப்படும்.

STP -0 °C and 760 mm of Hg

one cc of dry air 0.00129 gm/cc