லாத்வியன் லாட்ஸ்


Contributors to Wikimedia projects

Article Images

லாத்வியன் லாட்ஸ்

லாட்ஸ் (சின்னம்: Ls / s; குறியீடு: LVL ), லாத்வியா நாட்டின் நாணயம். ஒரு லாட்சில் நூறு சான்டிம்கள் உள்ளன. லாட்ஸ் என்ற சொல்லின் பன்மை வடிவம் “லாடி”. லாட்ஸ் நாணயம் 1922ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1940ல் இரண்டாம் உலகப் போரின் போது லாத்வியா சோவியத் யூனியனால் ஆக்கிரமிக்கப்பட்டவுடன் லாட்ஸ் நாணய முறை கைவிடப்பட்டு சோவியத் ரூபிள் நாணயம் புழக்கத்தில் இருந்தது. 1993ல் லாத்வியா விடுதலை அடைந்தவுடன் லாட்ஸ் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. லாத்வியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து விட்டதால் 2012 அல்லது 2013 முதல் லாட்ஸ்vகைவிடப்படும். அதற்கு பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயமான யூரோ லாத்வியாவின் நாணயமாகிவிடும்.

லாத்வியன் லாட்ஸ்
Latvijas lats (இலாத்வியம்)

1 லாட்ஸ் நாணயம்

ஐ.எசு.ஓ 4217
குறிLVL
அலகு
பன்மைலாடி
குறியீடுLs (எண்களின் முன்னால்)
மதிப்பு
துணை அலகு
 1/100சான்டிம்
பன்மை
 சான்டிம்சான்டிமி
குறியீடு
 சான்டிம்s (எண்களின் பின்னால்)
வங்கித்தாள்5, 10, 20, 50, 100, 500 லாடி
Coins1, 2, 5, 10, 20, 50 சான்டிமி, 1, 2 லாடி
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) லாத்வியா
வெளியீடு
நடுவண் வங்கிலாத்விய வங்கி
 இணையதளம்www.bank.lv
மதிப்பீடு
பணவீக்கம்-0,6%
 ஆதாரம்[1], ஜூலை 2010 கணிப்பு.
ஐ.ஒ மாற்று விகித வழிமுறை (ERM)
முதல் ஆண்டுமே 2, 2009
முதல் நிலையான விகிதம்ஜனவரி 1, 2005
யூரோவால் மாற்றப்பட்டது, பணம்2014-2018[1]
1 € =Ls 0.702804
பேண்ட்15 %